மேலும் முனிவர் கூறுகிறார் , சிவபார்வதி திருமணத்தின் போது இமயத்தில் எல்லோரும் கூடிவிட வடபாகம் தாழ்ந்து தென்பாகம் உயர, உலகம் சமநிலை பெற ஈசன் அகத்திய முனிவரை தென் பக்கத்திற்கு அனுப்பி அங்கேயே அவருக்கு தன் திருமண கோலத்தை காண்பிப்பதாக வாக்களிக்கிறார் . கங்கை நீரை கமண்டலத்தில் ஏந்திக்கொண்டு தென் திசையில் பொதிகை மலையில் அகத்தியர் தவமிருக்கிறார் .தென்பகுதி தாரகாசுரன் அட்டூழியத்தால் வளமிழந்து இருந்தது . விநாயக பெருமா கமண்டலத்தில் இருந்த கங்கை நீரை கவிழ்த்து காவிரியாக ஓடவைத்து செழுமையான பகுதியாக மாற்றுகிறார் . காவிரி பல கிளைகளாக பிரிந்து தென் பகுதி முழுமையும் செழிப்பாக்குகிறது . பல புண்ணிய க்ஷேத்திரங்கள் உண்டாயின . அதில் திருவாரூர் முக்கியமானதலம் .அங்கு அரசாண்ட மனுநீதி சோழன் நீதிக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவன் .
No comments:
Post a Comment