அய்யன் உமை அன்னையுடன் வாசம் செய்யும் கைலையின் பெருமை சொல்வதற்கு அரியது .தேவர்கள் பூதகணங்கள் கீதம் இசைக்க மஹாவிஷ்ணு . ப்ரம்மா மற்ற தேவாதி தேவர்கள் வேதங்களால் தோத்திரம் செய்ய ஈசன் இடப்பாகத்தில் அன்னையுடன் வீற்றிருக்கும் காட்சி விவரிக்க ஒண்ணாதது . கைலை மலையின் அடிவாரத்தில் பல முனிவர்கள் தவம் செய்கின்றனர் . அவர்களில் உபமன்யு முனிவர் மிக பெருமை வாய்ந்தவர் சிறந்த சிவ பக்தர் .கிருஷ்ண பரமாத்மாவே அவரிடம் தீக்ஷை பெற்றார் என்றால் அவர் பெருமைக்கு நிகர் ஏது ?
அவர்கள் ஒரு நாள் பூஜை முடிந்து உபமன்யு முனிவரிடம் அறிவுரை கேட்டுக்கொண்டு இருந்த பொழுது ஒரு பேரொளி ஆகாயத்தில் தோன்றி கைலை நோக்கி சென்று மறைந்தது .
அவர்கள் ஒரு நாள் பூஜை முடிந்து உபமன்யு முனிவரிடம் அறிவுரை கேட்டுக்கொண்டு இருந்த பொழுது ஒரு பேரொளி ஆகாயத்தில் தோன்றி கைலை நோக்கி சென்று மறைந்தது .
No comments:
Post a Comment