தொண்டர் பெருமை விளக்க இப்பாடலை காண்போம் . முருக பெருமான் அவ்வை பிராட்டியிடம் சில வினாக்களை தொடுக்கிறார் . பதிலை அளிக்கும் பிராட்டி பெரியது எது எனும் வினாவிற்கு தரும் பதிலே இப்பாடல் .
பெரிது பெரிது புவனம் பெரிது , புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகனோ திருமால் உந்தியில் வந்தோன், திருமாலோ பாற்கடல் துயின்றோன் ,
பாற்கடலோ குறுமுனி கைஅடக்கம் , குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியில் சிறுமண் காணும் , புவியோ அரவினுக்கு ஒருதலை பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம் , உமையவாளோ இறைவர்தம் பாகத்து ஒடுக்கம்
இறைவரோ தொண்டர்தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே
இப்பாடலில் தொண்டர் பெருமையை அவ்வையார் அழகாக தெளிவாக விளக்குகிறார் . ஈசன் சுந்தரரை இப்புவியில் பிறக்க வைத்து அவரையும் ஒரு அல்லலில் விழவைத்து தானே சுந்தரருக்கு "அடியார்க்கு அடியேன் '' என்று அடியெடுத்து கொடுத்து திருத்தொண்டர் தொகை எனும் அடியார்களின் பெருமையை உலகுக்கு எடுத்து உரைக்கும் பாடலை பாடவைக்கிறார் . ஆக ஐயனே தான் தம் அடியார்களின் உள்ளத்தில் வாழ்வதாக உணர்த்துகிறார் . அத்தகைய அடியார்களின் பெருமையை மிகுந்த தாழ்மையுடனும் அளவிலா பக்தியுடனும் சேக்கிழார் பாடும் இந்நூலை 'பெரிய புராணம் ' என்று போற்றுவது பொருத்தமே .

No comments:
Post a Comment