அறம் ,பொருள் இன்பம் , வீடு எனும் நான்கு புருஷார்த்தங்களை கண்டோம் . வேத ஆகமங்கள் கூறும் இக்கருத்தினை திருமூலர் வலியுறுத்துகிறார் . அறமே முதல் இடம் பெறுகிறது .நம் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு பருவத்திலும் அறம் சார்ந்ததாக இருப்பது அவசியம் . பின் வரும் பாடல்களில் அறங்களை திருமூலர் விரிவாக கூறுகிறார் . பொருள் நமக்கு அத்தியாவசியம் .நேர்மையான பாதையில் நமக்கு தேவையான அளவு பொருள் ஈட்டுவது தர்மம் ஆகும் . இன்பமும் அவ்வாறே தர்மத்திற்கு உட்பட்டும் அதீதமான ஈடுபாடு வைக்காமலும் அனுபவிப்பது நன்று . வயது ஆக ஆக இந்த சிற்றின்பகளை அகற்றி வீடு அதாவது இறைவன் தாள் அடைவதையே முக்கிய கருத்தாக கொண்டு மனதை அவ்வழியில் செலுத்த வேண்டும் . அதை ஔவையார் இப்பாட்டில் விளக்குகிறார் .
ஈதல் அறம் தீவினை விட்டு ஈட்டல் பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு
பட்டதே இன்பம் ,பரனை நினைந்து
இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு
ஈதல் அறம் தீவினை விட்டு ஈட்டல் பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு
பட்டதே இன்பம் ,பரனை நினைந்து
இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு
No comments:
Post a Comment