திருமூலர் ஆக்கையை குறிப்பிடும்போது அதன் நிலையாமையையும் குறிப்பிடுகிறார் . நம் உடல் , இளமை அழகு , உடல் பலம் ,ஆரோக்கியம் இவை யாவுமே நிலையானது அல்ல என்பதை குறிப்பிடுகிறார் . இது நம்மை அச்சப்படுத்துவதற்கு அல்ல . நாம் நற் பே றடைய இந்த உண்மையை மனதிற்கொண்டு செயல்பட வேண்டிய அவசியத்தை தெளிவு படுத்துகிறார் . மாயை நிறைந்த இவ்வுலகில் நல்லவைகளை தேர்ந்து எடுத்து அந்த மார்கத்தில் நாம் செல்ல நம்மை அவர் வழி நடத்துகிறார் . வேத ஆகமங்கள் கூறுவதையே இவர் நமக்கு எடுத்து கூறுகிறார் .
No comments:
Post a Comment