உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பாலயம் ,வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் ,
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் , கள்ள புலனைந்தும் காண மணிவிளக்கே |
உடல் நிலையாமையை குறிப்பிட்ட திருமூலர் உடலை இழிவாக குறிப்பிடவில்லை . அதை ஆலயமாக குறிப்பிடுகிறார் . ஈசனின் கொடையாக கிடைத்த இவ்வுடல் போற்றுதலுக்கு உரியது . இது அவர் கருத்து .ஒவ்வொரு ஆன்மாவிலும் ஈசன் உறைந்திருக்கிறான் என்பதை உணர்ந்தால்
இம்மானிட பிறப்பின் மேன்மையை அறிய முடியும் . திருமூலர் காட்டிய வழியில் நடந்து ஈசனில் தம்மை அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு இவ்வுலகு ஆனந்தமயம் . பக்தி என்ற நிலை ஆனந்தம் என்று ஒரு கவிஞர் குறிப்பிடுகிறார் . திருமுலர் இவ்வுடலை பேணி காக்க நிறைய அறிவுரைகள் வழங்கு கின்றார் . அன்பு ,ஈதல் , இன்சொல் பக்தி இவைகளால் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளல் அவசியம் . உடலுக்காக யோகம் ,ஆசனம் ,பிராணாயாமம் போன்ற அநேக பயிற்சிகளையும் அவர் எடுத்து உரைக்கிறார் .

No comments:
Post a Comment