Sunday, 7 July 2019

திரை   செலுத்த   வந்த   அதிகாரிகள்   சென்ற  பின்   அரசர்   இன்னும்   திரை  செலுத்தாமல்   தம்   ஆதிக்கத்தை   எதிர்ப்போர்   யாராவது  . இருக்கிறார்களா   என்று   வினவினார் .  அதற்கு   அமைச்சர்   அதிகன்   எனும்   அரசன்   மலைகளுக்கு   நடுவே   அவன்   ஊர்   இருப்பதால்   தன்னை   வெல்ல   முடியாது   எனும்   இறுமாப்புடன்  பேசுவதாகவும்   தெரிவித்தார் .  அரசன்   மிக்க   சினமடைந்து   உடனே   நால்வகை    சேனையுடன்   சென்று   அவனை   தலை   பணிய   செய்து   திரை   வசூலித்து   வருமாறு   ஆணையிட்டார் .   அவ்வாறே   சேனைகள்   புறப்பட்டன .  பெரும்   சேனையை   கண்ட   அதிகன்   தலை   மறைவாகி   விட்டான் .  படை   வீரர்கள்   கிடைத்தோர்   தலைகளை    சீவி    ஊரை   கொள்ளை   அடித்து   ஏராளமான   திரவியங்களை   கொள்ளை   அடித்து   கொண்டு   வந்தனர் .  சேனை   தலைவன்   தன்   வெற்றியை   பறை   சாற்ற   பண   குவியலையும்   தலைகள்   குவியலையும்   சமர்ப்பித்தான் .

No comments:

Post a Comment