தொண்டை நாட்டில் திருவொற்றியூர் என்னும் இடத்தில் சேணியர் குலம் சேர்ந்த கலியன் என்பவர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் . ஒற்றியூர் உடையாரிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் . தம் செக்கில் ஆட்டிய எண்ணெய் கொண்டு அவர் ஆலயத்தில் இரவும் பகலும் விளக்கேற்றி மகிழ்ச்சி அடைவார் . அவருடைய பெருமை உலகம் அறிய செய்ய எம்பெருமானுக்கு ஆவல் உண்டாயிற்று . அதன் விளைவு கலியனுடைய செல்வம் குறைய ஆரம்பித்தது . வேலை செய்து சம்பாதிக்கும் நிலை . எண்ணெய் வாங்கி லாபத்தில் விற்று தம் கடமையை தொடர்ந்தார் . அதற்கும் போட்டி ஏற்பட்டு அதுவும் வருமானம் குறைந்தது . வேலை செய்து சம்பாதிக்கவும் போட்டி அதிகமாக இருந்தது . அவர் கடைசியில் தன் மனைவியை விற்று தன் கடமையை தொடர துணிந்தார் . ஆனால் சிவத்தொண்டரின் மனைவியை வாங்க யாரும் துணியவில்லை . அவர் மனமுடைந்து போனார் . மாலை வந்தது . விளக்கேற்ற என் செய்வது ? வேதனை வாட்டியது. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து தன் ரத்தத்தில் கொழுப்பு உள்ளது அதை எடுத்து ஊற்றலாம் என்ற முடிவுடன் தன் கையை விட்டிக்கொள்ள முனைந்தார் . விட்டுவிடுவாரா ஐயன் . அவன் கையை பிடித்து தடுத்து ரிஷபாரூடராய் அவருக்கு காட்சி கொடுத்து அவரை ஏற்றுக்கொண்டார் ..
No comments:
Post a Comment