நீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தரை தம் ஊரான எருக்கத்தம்புலியூர் அழைத்து சென்று அவரை அன்போடு உபசரித்து சுற்றியள்ள எல்லா திருத்தலங்களையும் சேவிக்க செய்தார் . அவர் பாடும் பதிகங்கங்களுக்கு கூட யாழ் வாசித்து மகிழ்ந்தார் . நெல்வாயில் அரத்துறை நாதரை தரிசித்துகொள்ள புறப்பட்டனர் . அதுநாள் வரை தந்தையின் தோளில் சுமக்கச்செய்து வந்து கொண்டிருந்த சம்பந்தர் இனியும் அவர்க்கு சிரமம் கொடுக்க விரும்பாமல் நடந்து பயணம் தொடர விரும்பினார் . நெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி எனும் இடம் நெருங்கும்போது சோர்ந்து போய் மேலும் தொடர முடியாமல் அங்கு தங்க முடிவெடுத்தனர் . எதிர்பாராமல் அவ்வூர் மக்களுக்கு அவர் தரிசனம் கிடைக்க மகிழ்ச்சி பொங்க அவரை வரவேர்த்தனர் . அரைத்துறைநாதர் தன் மகன் இவ்வாறு துன்ப படுவதை காண பொறுக்காமல் அவருக்கு முத்து சிவிகையும் குடையும் கொடுக்க இச்சை கொண்டார் .
No comments:
Post a Comment