Monday, 19 November 2018

இவ்வாறு   இருக்கையில்   சிவபாதவிருதயர்க்கு   தன்   மகனுக்கு   உபநயனம்   செய்து   பார்க்க   ஆவல்   உண்டாயிற்று .   அந்தணர்களை    வரவழைத்து   சுப   முகூர்த்தம்   நிர்ணயித்தார் .   குறிப்பிட்ட     நாளில்   அந்தணர்கள்   வந்து    பிரம்மோபதேசம்   நடந்தேறியது .   தந்தைக்கு   பேரானந்த  ம் .    குழந்தைக்கு   வேதம்   முறைப்படி   உபதேசிக்க   அந்தணர்கள்   முற்பட்டபோது   ஈசனும்   அன்னையும்   சேர்ந்து   கொடுத்த     ஞானபாலுண்ட   அப்பெருமகனார்க்கு   தாங்கள்   கற்றுத்தர   ஏதுமில்லை   என்று   உணர்ந்த   அந்தணர்கள்   அவரிடம்   உபதேசம்   பெற   எண்ணினர் .  அவரும்   பஞ்சாக்ஷரத்திற்கு   மிஞ்சிய   வேறு   மந்திரமில்லை   என்று வலியுறுத்தி      சொல்லி    'துஞ்சலும்   துஞ்சல் '   எனும்   பதிகம்   பாடி   அவர்களை   மெய்மறக்க   செய்தார் .   அந்தணர்கள்   மன   மகிழ்ச்சியோடு   அவரை   தொழுது   சென்றனர் .

No comments:

Post a Comment