அரத்துறைநாதர் இரவு அந்தணர்கள் கனவில் தோன்றி புதல்வன் சம்பந்தன் தன் பிஞ்சு கால்கள் நோக தன்னை காண நடந்து வரப்போவதாகவும் அவன் பிஞ்சு கால்கள் நோவதை தாம் காண இயலாது . ஆகையால் அவருக்கு முத்து பல்லக்கும் குடையும் சின்னங்களும் அளிக்க விரும்புவதாகவும் அவைகளை மாறன்பாடி சென்று சம்பந்தனை அப்பல்லக்கில் அழைத்து வருமாறு ஆணையிட்டு மறைந்தார் . விடிந்ததும் அந்தணர்கள் கோவிலை அடை ந்தனர். கோவிலில் முத்து சிவிகையும் குடையும் மற்ற சின்னங்களும் அங்கு தயாராக இருக்க கண்டு ஆச்சர்யம் அடைந்தனர் . அவைகளை எடுத்துக்கொண்டு யாவரும் மாறன்பாடி அடைந்தனர் . ஈசன் கருணையை நினைத்து தந்தையும் மகனும் எண்ணி வியந்து மெய்சிலிர்த்தனர் . சம்பந்தர் பல்லக்கை வலம் வந்து வணங்கி அதில் ஏறினார் . அடியார்கள் சிவிகையை தாங்கி னர் . ஒருவர் குடை பிடித்தார் மறறொருவர் சின்னங்களை தாங்கி முன்னால் சென்றார் . இவ்வாறு நெல்வாயிலரத்துறையை அடைந்தனர் .
No comments:
Post a Comment