Saturday, 17 November 2018

அங்கிருந்து   கிளம்பி   பல   தலங்களிலும்   ஐயனை  வணங்கி   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்து   திருசேய்நால்லூர்   வந்தார் .  சிவ   அபராதம்  செய்தவர்   தந்தை   என்றும்   பாராமல்   காலை  வெட்டி     மாய்த்து   தண்டித்து    அதன்   காரணமாக   ஐயன்   இவரை   மகனாக   ஏற்று  சண்டேஸ்வர   பதவி   அளித்து   தந்தைக்கும்   சிவபதம்    அளித்த   எம்பெருமானை    வணங்கி   துதித்து   சீர்காழி   வந்து   சேர்ந்தார் .   இத்தனை   பெருமை   பெற்று   திரும்பி   வந்த    ஞான   குழந்தையை   மக்கள்         எத்தனை   பெருமையுடன்   வரவேற்றிருப்பார்கள்   என்று   சொல்ல   தேவை   இல்லை .   ஊர்   எல்லையிலேயே   மக்கள்  மேளதாளத்துடனும்   பூர்ண   கும்பத்துடனும்     பெண்கள்     விளக்கு   ஆரத்தியுடனும்   அவர்   வரவை  எதிர்பார்த்து   ஆவலுடன்   காத்திருந்தனர் .   ஆளுடைப்பிள்ளை   மக்கள்   அன்பை   கண்டு   நெகிழ்ந்து    போனார் .

No comments:

Post a Comment