அரைத்துறைநாதரை கண்குளிர தரிசித்து தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து தன்மீது இத்துணை கருணை கொண்டு சிவிகை குடை மற்ற பொருள்களை அளித்த பெருமானை நெஞ்சார பாராட்டி பதிகங்களை பாடி மகிழ்ந்தார் சம்பந்தர் . நன்றி பெருக்கால் அங்கு சிலகாலம் தங்கி கண்குளிர சேவித்தார் . அவருக்கு ஞானப்பால் கொடுத்து பெற்றோர் ஸ்தானத்தில் தான் வணங்கும் தோணியப்பர் நினைவு வாட்டியது . அரத்துறை நாதரிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினார் .வழியிலுள்ள ஊர்களில் மக்கள் இத்தனை சலுகைகள் ஈசனிடமிருந்து பெற்ற அந்த ஞானக்குழந்தையை தரிசித்து வணங்க ஆலயங்களில் திரண்டனர் . சிவிகையை வலம்வந்து அவரை வணங்கினர் . அவர்கள் அன்பில் நெகிழ்ந்து போனார் சம்பந்தர் .
No comments:
Post a Comment