வேடுவ குலத்தில் பிறந்த கண்ணப்பன் முதல் முதல் ஒரு சீவலிங்கத்தை கண்டு அவ்வடிவில் ஈர்க்கப்பட்டு பக்தி பெருக்கெடுத்து தன் கண்களையே அவருக்கு கொடுத்து அவரை குணமாக்க முற்படும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கின்றத.ஈசனும் அவனிடத்து பாசம் பெருக்கெடுக்க கண்ணப்பா என்று அழைக்கிறார் . நந்தன் தாழ்ந்த குலத்தில் பிறந்த காரணத்தால் கோயில் வாசல் கூட மிதிக்க முடியாமல் தவிக்கிறான் . பக்தி பெருக்கில் அவரை காண முடியாத சோகம் அவனை வாட்டுகிறது. ஈசன் அவனை மனம் குளிர தில்லையில் வரவழைத்து ஏற்றுக்கொள்கிறார். இவர்களை போல் பலர் பக்தி பெருக்கால் சிவபதம் அடைந்தனர் .பலர் சிவன் அடியார்களை பெரும் மதித்து அவர்கள் சேவைக்காக எல்லை இல்லா துன்பங்களை அனுபவித்தனர் . சிவனடியார் சேவைக்காக ஒரு கொள்கை வகுத்துக்கொண்டு அதற்காக தன் உயிரையும் தர சித்தமாக இருந்த பக்தர்களும் உண்டு . இவர்களும் சிவபதம் அடைந்து நாயன்மார்களாக கொலு வீற்றிருக்கிறார்கள் . இவர்கள் கதைகளை பெரிய புராணத்தில் காணலாம் .''முழுநீறு பூசிய முனிவோர்க்கும் அடியேன் '' இது சுந்தரர் தன் திருத்தொண்டர் தொகையில் பாடிய து .இவர்கள் ஈசனை சதா துதித்தார்களோ இல்லையோ , ஈசன் இவர்களை மிக விரும்பி தன்னுடன் சேர்த்துக்கொண்டான்
I follow your blog very regularly. very well presented and very informative.
ReplyDelete