Monday, 14 November 2016

  உலகெலாம்  உணர்ந்தோதற்கு  அரியவன் 
 நிலவுலாவிய  நீர்மலி  வேணியன் 
 அலகில் சோதியன்  அம்பலத்தாடுவான் 
 மலர்  சிலம்படி  வாழ்த்தி  வணங்குவாம் |

இதுவே  அண்ணல்  அடியெடுத்து  கொடுக்க  சேக்கிழார  பாடிய  பாடல் , தொடர்ந்து  ஈசனை துதித்து  அவர்  எல்லையிலா  பெருமைகளை  பாடுகிறார் . 4286 பாடல்களை  கொண்ட  பெரியபுராணத்தை  இவ்வாறு  தொடங்குகிறார் .  பெருமைமிக்க  63  நாயன்மார்களின்  வாழ்க்கையை   மிகுந்த  பக்தி  சிரத்தையுடன்  எழுத  தொடங்குகிறார் . சுந்தரரால்  மிகுந்த  பக்தியுடன்  ''அடியார்க்கு  அடியேன் '' என்று  தன்னை  தாழ்மையுடன்  உணர்த்திக்கொண்டு  ஒவ்வொரு  வரியில்  அறிமுக   படுத்தப்பட்டு  பின்பு  நம்பியாண்டார்  நம்பியால்  அவர்கள்  பெருமை  ஒவ்வொரு  பாடலால்  பெருமை  படுத்தப்பட்ட  நாயன்மார்களின்  வரலாறை  விரிவாக  பாடி  அவர்கள்  பெருமையை  உலகுக்கு  உணர்த்துகிறார்  சேக்கிழார்.

No comments:

Post a Comment