பதினோராம் திருமுறை நம்பிகள் பாடல்களுடன் முடிவடைகிறது .ஈசனின் கைப்பட எழுதப்பட்ட ஒலையுடன் துவங்குகிறது . பெருமைக்குரிய நம்பிகள் பாடல்களுடன் நிறைவடைகிறது . அவருடைய பாடல்கள் தனி முக்கியத்துவம் உடையது . 63 நாயன்மார்கள் பெருமையை உணர்த்தி அவர்களுடைய புராணங்களை உலகறிய வைத்து சிவாலயங்களிலும் அவர்களின் உருவ சிலைகள் கொலுவிருக்க வகை செய்தது . பெரிய புராணம் எழுதப்படவும் காரணமாயிற்று . சுந்தரர் இவ்வறிய சிவத்தொண்டர்களை ஒவ்வொரு வரியில் அறிமுகம் செய்தார் . நம்பிகள் ஒவ்வொருவர் வரலாறையும் சுருக்கமாக தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் ஒவ்வொரு பாட்டாக எழுதி வைத்தார் . அதுவே பிற்காலத்தில் சேக்கிழாரால் பெரிய புராணமாக விரிவாக அத்தனை நாயன்மார்களின் வரலாறும் நமக்கு அளிக்கப்பட்டது . இவ்வகையில் இத்திருமுறை முக்கியத்துவம் பெறுகிறது
No comments:
Post a Comment