ஆனந்தம் அடைந்த நம்பி காலி தட்டுகளுடன் வீடு திரும்புகிறான் பலகாரங்களை பிள்ளையார் உண்டதாக கூறுகிறான் .ஆனால் யாரும் நம்ப தயாராக இல்லை .தந்தையும் அவனை நம்பாமல் தண்டிக்கிறார் . ஆனால் அவன் திரும்ப திரும்ப அதையே வலியுறுத்துவதை கண்டு மறுநாள் அவனை பூஜை செய்ய அனுப்பிய தந்தை தானும் பின் தொடர்கிறார் . அவன் கதவை தாளிட்டு கொண்டதும் சாவி துவாரம் வழியாக அவர் பார்க்கிறார் . அங்கு நடந்தததை கண்ட அவர் மெயசிலிர்த்து போகிறார் .வெளியே வந்த நம்பியை ஆரத்தழுவி கண்ணீர் சொரிகிறார் .நம்பியின் வாயிலிருந்து மடை திறந்தாற்போல் வரும் தமிழ் பாக்களை கேட்டு ஆனந்தம் மேலிட மகனை ஆர தழுவுகிறார் . ஆவலுடன் நம்பி ஊட்டிய உணவை உண்ட ஈசன் அவனுக்கு ஊட்டிய அறிவு ஊற்று அது . பெற்றோரின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை . இவ்வாறு விநாயகரின் பேரருளால் பெற்ற அறிவால் அவர் நமக்கு அளித்த கொடையே 63 நாயன்மார்களின் வரலாறு . நம்பி பிற்காலத்தில் விநாயகரின் பேரருளால் நாயன்மார்கள் அருளி செய்த தேவார பாடல்கள் தில்லையில் ஓர் அறையில் கிடப்பதாகவும் திறவுகோல் தீட்சிதர்கள் வசம் இருப்பதாகவும் உணர்ந்து மன்னன் ராஜராஜசோழன் உதவியால் அவற்றை கண்டெடுக்கிறான் .
No comments:
Post a Comment