Wednesday, 6 July 2016

11 திருமுறையின்  அடுத்த  24 வெண்பாக்களை  பாடியவர்  ஐயடிகள்  காடவர்கோன்  நாயனார் ஆவார் . அவர்  பல்லவ  மன்னர்  பரம்பரையை  சேர்ந்தவர்  காஞ்சியை  தலைநகராக  கொண்டு  ஆட்சி  செய்தவர் . சிறந்த  சிவபக்தர் . வேத  சாஸ்த்திரங்களை  நன்கு  கற்றுணர்ந் தவர் . பல்லவ  சாம்ராஜ்யத்தை  பெருக்கி  சிறந்த  முறையில்  ஆட்சி  செய்து  வந்தவர் .அவர்  ஆட்சியில்  மக்கள்  மட்டுமின்றி  எல்லா  ஜீவன்களும்  மிக  ஆனந்தமாக  வாழ்ந்தனர் . ஆனால்  அவர்  மனம்  மட்டும்  எப்போதும்  அந்த  அம்பல   கூத்தனை  நாடியவாறே  இருந்தது . ஆவலை  அடக்க  முடியாதவராய்  ராஜ்ஜிய  பாரத்தை  தன்  மகனிடம்  ஒப்படைத்து  விட்டு  சிவாலயங்களை  தரிசிக்க  பயணமானார் . தில்லை  கூத்தனிடம்  மனம்  பறிகொடுத்தவராய்  அவர்  மீது  பாடல்கள்  புனைந்தார் . மேலும்  பல  ஆலயங்களில்  ஐயனை  தரிசித்து  பாடல்கள்  பாடி  மனம்  மகிழ்ந்தார் . இவ்வாறு  சிவாலயங்களை  தரிசித்து  ஒரு  ஐப்பசி  மூலம்  நாளில்  இறைவன்  அடி  சேர்ந்தார் . 63 நாயன்மார்களில்  இவரும்  ஒருவர்  ஆவார் .

No comments:

Post a Comment