ஒருநாள் சேரமான் பட்டத்து யானை மேல் சென்று கொண்டிருந்த போது ஒரு சலவை தொழிலாளி வந்து கொண்டிருந்தான் . அவன் உடலெல்லாம் சுண்ணாம்பு நீரால் வெளுத்து காணப்பட்டது . சேரமான் அதை திருநீறு என்று எண்ணிக்கொண்டு யானையை விட்டு இறங்கி அவன் காலடியில் விழுந்தான் . திகைப்படைந்த தொழிலாளி தான் சாதாரண சலவை தொழிலாளி என்று வற்புறுத்தியும் அரசன் காதில் அது விழவே இல்லை .அவனுடைய பக்தியின் ஆழம் வியக்கத்தக்கது .
No comments:
Post a Comment