வாழ்வின் நிலையாமை செல்வம் நிலையாமை இவற்றை சொல்வதால் இம்மானிட பிறப்பை குறையாக மதிப்பிட தேவை இல்லை . கிடைப்பதற்கு அரியது மானிட பிறவி . விஷ்ணு வே இப்புவியில் ராமராகவும் கிருஷ்ணராகவும் அவதரித்துள்ளார் . சிவபெருமானும் தன் அடியார்களை ரட்சிக்க இப்புவியில் பல வேடங்களில் தோன்றி பல பல விளையாடல்கள் புரிந்துள்ளார் . அநேக சித்தர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து பல சாதனைகள் புரிந்துள்ளனர் . ஹனுமான் இங்குதான் ராமர் இருப்பதால் இவ்வுலகை விட்டு நீங்க விரும்பாமல் இவ்வுலகிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது . இவ்வாறு பெருமை பெற்றது இவ்வுலகம் .திருமூலர் காட்டிய நன்னெறிகளை கடைப்பிடித்து வாழ்ந்தால் வாழ்க்கை இன்பமே .
No comments:
Post a Comment