பஞ்சமா பாதகங்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டியவை என்று எச்சரித்த திருமூலர் கொல்லாமை , பிறன் மனைவி நாடாமை ,பொய் பேசாமை , கள்ளுண்ணாமை , எல்லா ஜீவன்களிடத்தும் அன்பு செலுத்துவது போன்ற நற்பண்புகளை சிறந்த அறமாக கைபற்றும்படி போதிக்கிறார் . யாகத்தின் சிறப்பை கூறுகிறார் . யாகம் பொது நலனுக்காக செய்யப்படுகிறது . நாட்டில் மும்மாரி பொழிந்து பயிர்கள் செழிப்புறவும் , இயற்கை உத்பாதங்கள் எதுவும் நேராமலும் மக்கள் செழுமையுடன் குறையின்றி வாழ பஞ்ச பூ தங்களின் அதிதே வதைகளையும் மற்ற தேவர்களையும் நன்றியுடன் போற்றும் பொருட்டு செய்யப்படுகிறது .
No comments:
Post a Comment