தானத்தில் சிறந்தது அன்னதானம் .மனிதன் அல்லும் பகலும் உழைப்பது ஒரு சாண் வயிற்றை நிரப்பவே . நாம் என்ன தானம் செய்தாலும் பெறுபவர்க்கு முழுமையாக திருப்தி அடையாமல் இன்னும் கொஞ்சம் கிடைத்தால் நலமாக இருக்கும் என்றே தோன்றும் . ஆனால் அன்னதானம் செய்யும் போது வயிறு நிறைந்த எந்த மனிதனும் மனம் திருப்தி அடைந்து அன்னமிட்டவரை வாயார வாழ்த்துவான் .பசியை போக்குவது நம்மால் செய்யக்கூடிய மிக சிறந்த தர்மம் . காக்கைகளை பாருங்கள் . ஒரு காக்கை உணவைக்கண்டால் தான் மட்டும் உண்ணாது மற்ற காக்கைகளை அழைத்து எல்லாம் சேர்ந்தே உண்ணும் . ஐந்தறிவு படைத்த அவையே இத்தகைய பண்பை கடைபிடிக்கும்போது ஆறறிவு படைத்த மனிதன் கடைபிடிக்காமல் இருப்பது வெட்கம் .
No comments:
Post a Comment