Friday, 2 October 2015

senthanar

அடுத்த  34 திருவிசைபாக்களையும்  13 திருப்பல்லாண்டுகளையும்  பாடியவர்  சேந்தனார்  ஆவார் . அவர்  நாங்கூர்  எனும் இடத்தில்  வாழ்ந்தவர் . பட்டினத்தார்  அவர்களிடம்  கணக்கராக  வேலை  செய்தவர் . அப்போது  சேந்தனார்  பட்டினத்தடிகள்  சொல்படி  அவருடைய  செல்வத்தை  ஏழைகளுக்கு  தானமாக  வழங்கிவிட  அவர்  சிறையில்  அடைக்க  படுகிறார் . பட்டினத்தார்  ஈசனிடம்  வேண்டி  அவரை  சிறையிலிருந்து  மீட்கிறார்.  பிறகு   சேந்தனார்  தில்லை  சென்று  அங்கு  விறகு  வெட்டி  அந்த  வருவாயில்  ஜீவனம்  நடத்துகிறார் .அவர்  தான்  பக்தியுடன்  போற்றும்  தில்லை  கூத்தனின்  அடியார்  ஒருவருக்கு  தான்  உண்ணும்  கூழை  அளிக்காமல்  தான்  உண்ணவே  மாட்டார் . அப்போது  ஒரு  நாள்  அம்பலவாணரெ  அடியாராக  வந்து  கூழு  அருந்தி  அதை  தன மேனியில்  காண்பித்து  எல்லோரும்  அறிய  செய்கிறார் . ஒரு  சமயம்  தில்லை யில்  திருவாதிரை  திருநாளன்று  ஈசனின்  தேர்  நகராமல்  போககண்டு  எல்லோரும்  திகைத்து  நிற்க  இவர்  திருப்பல்லாண்டு  13 பாக்களை  பாடி  தேர்  வீதி  வலம்  வர  செய்கிறார் . எல்லோரையும்  வியப்பில்  ஆழ்த்துகிறார் . அவர் பாடிய  பல்லாண்டு  13 பாக்களே  ஆனாலும்  பெரிதும்  போற்றப்பட்டது . தினமும் எல்லா   சிவாலயங்களிலும்  ஈசன்  தீபாராதனைக்கு  பின்  பாடப்படும்  பஞ்ச  புராணம்  எனும்  திருமுறை  தொகுப்பில் பல்லாண்டும்  அடங்கும் .  பிறகு  சேந்தனார்  சேந்த மங்கலம்  எனும்  இடத்தில்  ஆசிரமம்  அமைத்து  முருகனையும் வழிபட்டு  வந்தார்  ஒரு தை  பூச  நன்னாளில்  ஈசனடி  சேர்ந்தார் .       

No comments:

Post a Comment