மாணிக்கவாசகர் பக்தி அதிசயிக்கத்தக்கது . ஈசனிடம் திருவடி தீக்ஷை பெற்றபின் அவர் தன்னை முழுமையாக அவரிடம் அர்ப்பணித்து விட்டார் . ஈசனை தவிர வேறு சிந்தனையே அவருக்கு எழவில்லை . சிக்கென பிடித்தேன் என்று பாடுகிறார் . எத்தனை கடுமையான சோதனைகளுக்கு ஆட்படு த்தப்பட்ட போதிலும் அவர் தன் நிலை மாறவில்லை. அத்தனை சோதனைகளையும் அவர் ஏற்றுக்கொண்ட பாங்கு ஈசனையே வியக்க வைத்திருக்கும் . அதுவே அவரை கூலி ஆளாக வரவைத்து பிரம்படியும்பட வைத்தது . இத்தனைக்கு பிறகும் அவர் தன்னை எத்தனை தாழ்த்தி கொண்டு பாடுகிறார் . அவருடைய தன்னடக்கம் எல்லை இல்லாதது .
No comments:
Post a Comment