அம்மையே அப்பா ஒப்பிலாமணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கிப் பொழுதினை சுருக்கும் புழுத்தலை புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உனை சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே |
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து , நீ பாவியேன் உடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினை சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
யான் உனை தொடர்ந்து சிக்கெனப்பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

No comments:
Post a Comment