நாவுக்கரசர் கோவிலில் ஈசன் சன்னதி முன் பையன் உடலை கிடத்தினார் . ஈசனை நோக்கி ''ஒன்றுகொலாம் '' எனும் பதிகத்தை பாடுகிறார் .இந்த பதிகத்தில் ஐயனின் மேன்மைகளை ஒன்று முதல் பத்து வரை வரிசை படுத்தி பாடுகிறார் .இந்த பதிகத்தின்மூலம் அவ ர் ஒரு கோரிக்கையையும் வைக்கவில்லை . அவர் உள்ளத்தில் சதா குடிகொண்டிருக்கும் ஈசன் அறிய மாட்டாரா அவரது மனத்தில் உள்ள கோரிக்கையை ? அவரது பத்து பாடல்கள் முடிந்ததும் எங்கிருந்தோ வந்த நாகம் சிறுவனின் காலில் செலுத்தப்பட்ட விஷத்தை உறிஞ்சி மீண்டும் எடுத்துக்கொண்டு வந்த வழியே சென்றது. சிறுவனும் தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல் எழுந்து கொண்டான் . நாவுக்கரசரும் , பெற்றோரும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை ஏது ? அவர்களுக்கு அப்பர் மேல் கொண்ட பக்தி பன் மடங்காகியது . இப்போதும் திங்களூரில் பாம்பின் விஷம் யாரையும் பாதிப்பதில்லை என்று கூறப்படுகிறது .
No comments:
Post a Comment