அப்பரடிகள் பல திருத்தலங்களை சேவித்து பல பதிகங்களை பாடிக்கொண்டு காளத்தி நாதரை காண காலஹஸ்தி செல்கிறார் . அவருக்கு கைலாயத்திற்கு சென்று கைலாயநாதரை காணும் பேராவல் எழுந்தது . தன் சிஷ்யர்களை அங்கேயே இருக்க கூறிவிட்டு அவர் தனியாக கைலாயம் நோக்கி பயணத்தை துவங்குகிறார் .வயது முதிர்ந்த காரணத்தால் பயணம் நீண்டது .நா ள் செல்ல செல்ல அவர் கால்கள் ஒத்துழைக்க மறுத்தன . கைகளை ஊன்றி தவழ்ந்தும் உடலால் தேய்த்துகொண்டும் முன்னேற முற்பட்டார் . கைகள் .கால்கள் உடல் எல்லாம் ரணமாயின . ஆயினும் அவருடைய கைலைநாதரை காணும் பேராவல் அதிகமாயிற்றே தவிர குறையவில்லை .
No comments:
Post a Comment