நாவுக்கரசர் சைவத்திற்கு மாறியதை அறிந்த மகேந்திர பல்லவனும் சமணர்களும் பெரும் ஆத்திரமடைந்தனர் . சமணர்கள் நாவுக்கரசரை கொல் வதற் கு மன்னருடன் பல வகைகளில் முயற்சி செய்தனர் . நாவுக்கரசரால் இடைவிடாமல் நம்பிக்கையுடன் ஓதப்பட்ட நமசிவாய மந்திரம் அவரை தொடர்ந்து காத்தது . அவரை பெரும் பாறையில் கட்டி கடலில் வீசுகின்றனர் அந்த பாறையே தோணி போலாகி அவரை கரை சேர்க்கிறது .
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழா
கற்றுணை பூட்டியொர் கடலில் பாய்ச்சினும்
நற்துணை ஆவது நமசிவாயவே .
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழா
கற்றுணை பூட்டியொர் கடலில் பாய்ச்சினும்
நற்துணை ஆவது நமசிவாயவே .
No comments:
Post a Comment