Monday, 1 September 2014

sambandar

கோவிலில்  3 வயது  சம்பந்தரை  குளக்கரையில்  விட்டுவிட்டு  தந்தை  குளிக்க  செல்கிறார் .குழந்தை  பசி  தாளாமல்  அழ  உமையன்னை  குழந்தைக்கு  பால்  ஊட்டுகிறாள் . அந்த  கணமே  குழந்தை  பாட  தொடங்குகிறது .
  தோடுடைய  செவியன்  விடையேறியோ ர்தூ வெண்மதி  சூடி
 காடுடைய  சுடலைப்பொடி  பூசியென்  உள்ளம்  கவர்  கள்வன்
என்று  தொடங்கி  பாடுகிறார் . எல்லோரையும்  ஆச்சர்ய  கடலில்  ஆழ்த்துகிறார் . தந்தையின்  ஆனந்தத்திற்கு  அளவே  இல்லை .பக்தி  ரசம்  பொங்கிய  இவர்  பாடல் களில்  மயங்கிய  ஈசன்  பிஞ்சு  கரங்கள்  நொககூடாதென்று  பொற்தாளம்  கொடுத்து  மகிழ்கிறார் . உமையன்னை  தாளத்திற்கு  ஓசை  கொடுத்து  குழந்தை  தாளம்  போட்டு  பாடுவதை  ரசிக்கிறாள் .   

No comments:

Post a Comment