Friday, 26 September 2014

vasitheerave

சம்பந்தர்  அப்பருடன்  பல  ஆலயங்களை  சேவித்துக்கொண்டு  திருவீழிமிழலை யை  அடைந்தனர் . அப்போது  அந்த  ஊரில்  கடும்  பஞ்சத்தால்  மக்கள்  பெரும்  துன்பத்திற்கு  ஆளானார்கள் . இவர்கள்  படும் வேதனை  கண்ட  இருவரும்  வீழிநாதர்   குடி இருக்கும்  இத்தலத்தில்  மக்கள்  இப்படி  அவதி  படுவது  நீதியோ  ஐயனை  துதித்து நெகிழ்ந்து  உருகி  வேண்ட  அவர்கள்  கனவில்  ஈசன்  தோன்றி  அவர்கள்  இருவருக்கும்  பஞ்சம்  தீரும்  வரை  இரு  கோபுர  வாயில்களிலும்  இரு  படிகாசுகள்  வைப்பதாகவும்  அதைக்கொண்டு  பண்டம்  வாங்கி  அன்னமிட்டு  மக்கள்  பசி  ஆற்றுமாறு  கட்டளை  இட்டார் . ஆனால்  சம்பந்தர்  பங்கு  காசு  கறையுள்ள  காசாக  இருந்ததால்   அவர்  தன கடமை  ஆற்ற  காலதாமதமாயிற்று . உடனே  சம்பந்தர்  ஈசனை  துதித்து  பாடி  கறை கொள்  காசினை  முறைமை  ஆக்க  வேண்டினார் . ஈசனும்  அவ்வாறே   செய்தார் . அப்பதிகம்
  வாசி  தீரவே  காசு  நல்குவீர்  மாசின் மிழலையீர் , ஏசலிஇல்லையே
 இறைவறாயினீர் .மறைகொள்  மிழலையீர்
 கறைகொள்  காசினை  முறைமையாக்குமே 

No comments:

Post a Comment