சுந்தரர் வேதனை அடைந்து தியானித்தார் . ஐயனே உன் சொற்படி மணிமுத்தாறில் இட்டு கமலாலயத்தில் எடுத்துக்கொள்ள நீதானே ஆணையிட்டாய் . இப்போது கைவிட்டாயே ! என்று கண்ணீர் விட்டார் . அவர் உள்ளத்திலிருந்து பதிகம் பீரிட்டு வந்தது .அவர் பாடி முடிக்கும் முன்பே குளத்தின் அடியிலிருந்து பொற்கிழி மேலே வந்தது . பரவையார் ஒரு காசை எடுத்து உரைத்தார் .அது மாற்று குறைவாக இருந்தது . பதறி போனார் . சுந்தரர் மாற்று உறைத்து பார்த்துத்தானே வாங்கினேன் என்று கலங்கி போனார் . பிறகு ஐயன் கருணையால் மாற்று குறையாத பொன்னாயிற்று . இருவரும் ஆலயம் சென்று ஈசனை வழிபட்டு வீடு திரும்பினர் .
No comments:
Post a Comment