Monday, 25 November 2019

ஈசன்   சுந்தரரின்   மனதில்   மறுபடியும்   சிவாலயங்கள்   சேவிக்கும்   ஆவலை   தூண்டினார் .  பரவையாரிடம்   விடைபெற்றுக்கொண்டு   தொண்டை   நாட்டு   தலங்களை   சேவிக்க   புறப்பட்டார் .   முதலில்   திருநள்ளாறு   சென்று  ஐயனை     வணங்கி   மகிழ்ந்தார் .   திருக்கடவூர் ,  திருவெண்காடு   மற்றும்   பல   தலங்களை   தரிசித்து   கொண்டு   வழியில்   திருநீடூர்   செல்லாமல்   பயணப்பட்.டார் .   இறைவன்   அவருக்கு   அதை   உள்ளத்தில்   உணர்த்தினார் .  சுந்தரர்   தன்   பிழைக்கு   மிக்க   வருந்தி   அதை   தமக்கு   நினைவு   படுத்திய   ஐயனின்   கருணையை   நினைந்து   நினைந்து   உருகி  அப்பெருமானை   வணங்கி   பயணம்   தொடர்ந்தார் .  திருநீடூர்   வழிபட்டு   திருப்புன்கூர்   சென்றார் .  அங்கிருந்து   திருக்கோலக்கா   சென்றடைந்தார் .  அவ்வூர்   பெருமான்   சம்பந்தரின்   பிஞ்சு       கரங்கள்  தாளம்    போட்டு   நோகாமல்   இருக்க   பொற்தாள கள்   கொடுத்து  அம்மையின்   அருளால்   அவைக்கு        ஓசை   எழ   செய்த    அந்த  திருவிளையாடலை   நினைத்து   நெக்குருகி   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் . 

No comments:

Post a Comment