Tuesday, 5 November 2019

சுந்தரர்   கூடலை  ஆற்றுர்ஐயனை  மனமுருகி   தரிசனம்   செய்து   மகிழ்ந்து   முதுகுன்றம்   அடைந்தார் .  தம்பிரான்   தோழர்   அல்லவா?  உரிமையுடன்   அவரை    தமக்கு   பொன்   வேண்டுமென்று   கேட்டுக்கொண்டார் .   ஐயனும்   உடனே   பன்னிரெண்டாயிரம்   பொன்   கொடுத்தார் .    அதை   எவ்வாறு   ஆரூர்   எடுத்து   செல்வது   என்று   மேலும்   வினவ   அதை   மணிமுத்தாறில்    போட்டு   கமலாலயத்தில்   எடுத்துக்கொள்ளுமாறு   அருள்புரிந்தார் .   உடனே   சுந்தரரும்   அவ்வாறே   பன்னிரெண்டாயிரம்   பொன்னையும்   எம்பெருமானை   தியானித்து   மணிமுத்தாறில்    விட்டார் .   அங்கிருந்து   சுந்தரர்      தில்லை   வந்தடைந்தார் .  பேரூரில்   ஆல்டலரசனை   நடன   கோலத்தில்  கண்டு   மகிழ்ந்த   அதே   கோலத்தில்   மறுபடி   தில்லையில்   கண்டு   பேரானந்தம்   அடைந்தார் .   அவ்வூர்   வீதிகளில்   தொழுதபடி    நடந்து   அந்தணர்களையும்   தொழுது   அங்கிருந்து    கிளம்பி   பல   தலங்களை   சேவித்துக்கொண்டு    பல    பதிகங்கள்   பாடி   மனமகிழ்ந்து   ஐயனையும்   மனம்   குளிரச்செய்து   ஆரூர்   வந்து   சேர்ந்தார் .    

No comments:

Post a Comment