சுந்தரர் பரவையார் மாளிகையில் இருந்துகொண்டு ஆரூரரின் அருமை தோழன் பக்தன் அடியான் எல்லாமாக இருந்து வழிப்பட்டு வரும்கால் ஐயன் சுந்தரர் இப்புவியில் பிறப்பெடுத்ததன் காரணங்களில் ஒன்று நிறைவேறினாலும் மற்ற ஒன்று மீதம் இருப்பதை மனதில் கொண்டு அவருக்கு மீண்டும் சிவபெருமான் குடிகொண்டிருக்கும் மற்றும் பல ஆலயங்களை தரிசிக்கும் ஆவலை தூண்டினார் . சுந்தரரின் பெரும் சாதனையாக இவ்வுலகம் பெற்றது ஈசன் அடியெடுத்து கொடுக்க அவர் பாடிய திருத்தொண்டர்த்தொகையாகும் . 63 நாயன்மார்கள் ஈசனிடம் கொண்ட அளவிலா பக்தி , அவர்கள் ஆற்றிய சாதனைகள் அவர்களுக்காக எம்பெருமான் ஆடிய அற்புத திருவிளையாடல்கள் இவைகளை பாமர மக்கள் அறிந்து உய்வதற்கு காரணமாயிற்று . ' தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன் ' என்று ஈசன் அடியெடுத்து கொடுக்க அத்தனை பக்தர்களையும் கண்டறிந்து பட்டியலிட்டு அத்தனை பேருக்கும் தான் அடியேன் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் பாடிய அப்பதிகமே பிற்காலத்தில் பெரிய புராணமாக விஸ்வரூபம் எடுத்து எல்லா சிவாலயங்களிலும் 63 நாயன்மார்களும் மூர்த்திகளாக கொலு வீற்றிருக்கிறார்கள் .
No comments:
Post a Comment