ஓலையில் கண்ட அந்த ஒரு வாக்கியம் அவரை உ லுக்கி நிலை குலைய வைத்தது . அந்த கணமே அவர் மனம் சகல ஆசைகளையும் துறந்தது . வெறும் கோவணத்துடன் ஆண்டி கோலத்தை ஏற்றார் . தன் செல்வம் அனைத்தையும் தன் நண்பரான சேந்தனார் எனும் சிவத்தொண்டரிடம் எல்லா செல்வத்தையும் வறியவர்களுக்கு தானமாக வழங்கிட பணித்தார் . சேந்தனாரை சொல்லுகையில் இதை குறிப்பிட்டிருக்கிறேன் . அவரும் அவ்வாறே செய்தார் .திருவெண்காடர் பட்டினத்து அடிகள் ஆகிறார் , அவருடைய தமக்கை இவ்வாறு செல்வம் பறிபோவதை காண பொறாமல் அப்பத்தில் விஷம் வைத்து அதை அடிகளாருக்கு கொடுக்கிறாள் . அதை அவர் தமக்கையின் வீட்டு கூரையில் எறிகிறார் . அவள் வீடு பற்றி எரிகிறது ." தன் வினை தன்னை சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும் " இது அவரது வாக்கியம் .
No comments:
Post a Comment