திருவெண்காடர் 16 வயதில் சிவகலை என்னும் பெண்மணியை மணம் செய்து கொண்டார் . வாணிபத்தில் சிறந்த முறையில் செயலாற்றி பெரும் செல்வந்தனானார் . ஆனால் மணமாகி 15 வருடங்கள் கடந்தும் பிள்ளை பேறு அடையவில்லை . சிவபெருமான் தன் விளையாட்டை தொடங்குகிறார் . அதே பகுதியில் சிவனடியார்களுக்கு அன்னமிட்டே மிக வறிய நிலை அடைந்து விட்ட ஒரு தம்பதியினருக்கு உதவ எண்ணம் கொண்டார் . அவர்கள் கனவில் தோன்றி அருகில் ஓர் இடத்தில் ஒரு மரத்தை குறிப்பிட்டு அதனடியில் ஒரு ஆண் குழந்தை இருக்கும் என்றும் அக்குழந்தையை திருவெண்காடரிடம் சேர்ப்பித்து அதன் எடை பொன் பெறுமாறு அறிவுறுத்துகிறார் . திருவெண்காடர் கனவில் தோன்றி ஏழை தம்பதிகள் ஒரு குழந்தையை கொடுப்பார்கள் என்றும் அவர்களுக்கு அந்த குழந்தை எடை பொன் கொடுக்குமாறும் அறிவுறுத்துகிறார் . அவர் ஆணையிட்டது போலவே குழந்தையை பெற்றுக்கொண்டு பொன் கொடுத்து அனுப்புகிறார் திருவெண்காடர் .
No comments:
Post a Comment