திருவெண்காடர் தம்பதியினர் திருவிடைமருதூர் ஆண்டவன் அருளால் கிடைத்த அக்குழந்தைக்கு மருதபிரான் என்று பெயரிட்டு அருமையுடன் வளர்க்கின்றனர் . அவன் வளர்ந்து தக்க வயது வந்ததும் அவனையும் வணிகத்தில் ஈடுபடுத்த எண்ணுகிறார் . வெளிநாடுகளுடன் வாணிபம் செய்ய கப்பலில் சரக்கை ஏற்றி அவனை அனுப்புகிறார் . மகன் கப்பலுடன் திரும்புகிறான் . ஆனால் தந்தைக்கு மிக்க ஏமாற்றம் அளிக்கும் வகையில் கப்பலில் விரட்டியும் வைக்கோலும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திருவெண்காடர் மகனை அடித்து அறையில் வைத்து புட்டுகிறார் . ஆனால் மகன் தாயிடம் ஒரு பெட்டியை கொடுத்துவிட்டு மறைந்து விடுகிறான் . பூட்டி இருந்த அறையில் இருந்து மகன் காணாமல் போனது கண்டு திடுக்கிடுகிறார் . மனைவியிடம் அவன் கொடுத்த பெட்டியை திறந்து பார்க்கிறார் . அதில் ஒரு காதற்ற ஊசியும் ஒரு ஓலையும் இருக்க கண்டார் . அந்த ஓலையில் 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே ' என்று எழுத பட்டிருந்தது . மேலும் அவன் கொண்டுவந்த விரட்டி களுக்குள் வைரமும் விலை உயர்ந்த ரத்தினங்களும் இருக்கக் கண்டார் . மகனாக வந்தது ஈசனே என்பதை அறிந்து கொண்டார்
No comments:
Post a Comment