Sunday, 11 September 2016

அடுத்து  826 முதல்  1035 வரை  உள்ள  பாடல்களை  பாடியவர்  பட்டினத்தார்  என்று  அழைக்கப்பட்ட  திருவெண்காடர் . பட்டினத்தார்  என்று  சொன்னாலே  நமக்கு '' காதற்ற  ஊசியும்  வாராது  காண்  கடை  வழிக்கே " என்ற  வாக்கியம்  நம் மனதில்  தோன்றும் . அந்த  ஒரு வாக்கியத்தால்  மனம்  மாறி   பெரும்  சித்தரான  மகான்  இவர் . பொருள்களின்  நிலையாமை யை  ஒரே  வரியில்  உணர்த்தும்  இந்த  வாக்கியத்தினால்  மனம்  மாறியவர்  .     காவிரி  பூம்பட்டினத்தில்  பெரும்  வணிகரான  சிவநேசன்  என்பவருக்கும் அவர்  மனைவி  ஞானக்கலை  என்பவருக்கும் திருவெண்காட்டு  ஈசன்  அருளால்  பிறந்தவர்  திருவெண்காடர் . அக்குடும்பமே  சிவத்தொண்டர்களை  பணிந்து  அவர்களுக்கு  அன்னமிட்டு  அதில் மகிழ்ந்து  வாழ்ந்தனர் . திருவெண்காடர்  5 வயதாக  இருந்தபோதே  துரதிஷ்டவசமாக  தந்தையை  இழந்தனர் .

No comments:

Post a Comment