சிலந்தி ஒன்று அந்த லிங்கத்தின் மேல் காய்ந்த இலை தழைகள் விழுவதை காண சகியாமல் , தன வலையால் ஒரு பந்தல் அமைத்து பாதுகாக்க முற்பட்டது . ஓர் யானை லிங்கத்தை பூஜை செய்ய வந்து அந்த பந்தலை தகர்த்து தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தது . இவ்வாறே தொடர்ந்தது . கோபம் கொண்ட சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து பெரும் அவஸ்த்தை உண்டாக்கியது வேதனை தாளாத யானை துதிக்கையை தரையில் அடித்தது .அதில் யானை, சிலந்தி இரண்டுமே மாண்டன . அந்த சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான் சோழ அரச தம்பதியினருக்கு மகனாக பிறக்க செய்தார் . பிற்காலத்தில் அவர் பக்திமானாக விளங்கி நிறைய சிவாலயங்களை எழுப்பினார் இவரைத்தான் திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுருக்க வெண்டும் என்பது ஐயங்காரின் அனுமானம் . அனால் அவர் வாழ்ந்த காலத்தை சரியாக கணிக்க இயலவில்லை அவரே கோ செங்கணான் என்னும் மன்னராவார் ..
No comments:
Post a Comment