Saturday, 19 July 2014

kannappa

ஒருநாள்  அவன்  பூஜை  செய்ய  வரும்போது லிங்கத்தின்  கண்ணில்  ரத்தம்  வழிவதை  காண்கிறான். அதை  காண  சகியாத  அவன்  தன  ஒரு  கண்ணை  பிடுங்கி  எடுத்து  கண்  தானம்  செய்கிறான் .  அந்த  கண் பொருந்தி  குருதி  நின்றதும்  பேரானந்தம்  கொள்கிறான் . ஆனால்  அந்தோ , அவரது  மறு கண்ணில்ருந்து  ரத்தம்  கொட்ட  தன்  கால் கட்டை  விரலை  அந்த  இடத்திற்கு  அடையாளமாக  வைத்துகொண்டு  தன மறு  கண்ணையும்  பிடுங்க  யத்தனிக்கிறான் . அப்போது அன்பே  உருவான ஈசன்  எதிரில்  தோன்றி  'கண்ணப்பா ' என்று  அழைத்து  ஆர  தழுவிக்கொள்கிறார் .  இவர்கள்  சிவபதம்  அடைந்ததில்  வியப்பென்ன ? ஈசனிடத்தில்  திண்ணன்  காட்டிய  கலப்படமில்லாத  பேரன்பு  எல்லாவித  ஆசார  அனுஷ்டானங்களையும்  கடந்து  அவன்  நெஞ்சில்  அமர்கிறது . திண்ணன்  உயர்ந்து  கண்ணப்ப  நாயனாரகிறான் .என்னே  ஈசனின்  அன்பு .

No comments:

Post a Comment