Tuesday, 18 December 2018

சம்பந்தர்   பொற்கிழியுடன்   தந்தையை   சீர்காழி   அனுப்பிவிட்டு    அவர்   ஆவடுதுறையில்   சிலகாலம்   தங்கி   ஈசனை   மனதார  தொழுதார் .  பிறகு   பல   தலங்களை   சேவித்துக்கொண்டு   நீலகண்ட   யாழ்ப்பாணர்  வேண்டுகோளுக்கு       இணங்கி   அவர்  பிறந்த  ஊரான   தருமபுரம்   சென்றார் .  அங்கு   அவ  ருக்கு  பலமான   வரவேற்பு   மக்களுக்கு   சந்தோஷம்   சொல்லில்   அடங்காது .  யாழில்   பாணர்   காழிப்பிள்ளை   பதிகங்களை   கேட்டு   மெய்ம்மறந்தனர் .  பாணர்   யாழில்   அவருடன்   வாசிப்பதால்   அவர்   பாடல்கள்   மேலும்   இனிமை   பெறுவதாக    பேசிக்கொண்டனார் .  அதை   கேட்டு  பாணர்   மிக்க   அதிர்ச்சி   அடைந்தார் .  ஈசன்    பேரருளால்   அன்றோ   தனக்கு  பெரும்பேறு   கிட்டி   இருக்கிறது .  அப்படி   இருக்க   தன்   யாழால்   அவர்   பாடல்  மேன்மை   பெறுவதாக   தம்   மக்கள்      பேசுவது   அவருக்கு   பெரும்   மனவருத்தத்தை   அளித்தது .  அவர்   காழிப்பிள்ளையை   வணங்கி   தன் வருத்தத்தை   விளக்கி   தன்  யாழுக்கு   அப்பாற்பட்டதாக   ஒரு   பாடலை   பாடுமாறு   வேண்டிக்கொண்டார்.  அவரும்   அவ்வாறே  'மாதர்   மடப்பிடியும் '  எனும்   பதிகத்தை   பாடினார் .  அவர்   மேலே   மேலே   பாட   பாணரால்   ஈடு   கொடுக்க   முடியாமல்   தந்தி   அறுந்தது.  அவர்   யாழை   உடைக்க   விழைகிறார் .  சம்பந்தர்   அவரை சமாதானம்   செய்து   யாழை   அவரிடம்   கொடுத்து   அவர்   பாடிய   அப்பண்ணிற்கு   'யாழ்முரி 'என்று   பெயர்   சூட்டுகிறார் .

No comments:

Post a Comment