நாள்தோறும் ஆலயத்தில் தொண்டு செய்தும் எம்பெருமானை வழிபட்டும் வந்த நாவுக்கரசருக்கு மற்ற சிவாலயங்களுக்கு சென்று அங்கும் ஆலய சேவை செய்து அங்குள்ள ஈசனையும் தொழுது மகிழ ஆவல் கொண்டு ஆலயங்களுக்கு சென்று பதிகம் பாடி மகிழ்ந்தார் . அப்படியே அவர் தூங்கானை மாடம் எனும் இடத்தை அடைந்தார் . அவர் மனதில் சிறிது காலமாகவே ஒரு பெரும் உறுத்தல் இருந்து வந்தது . சிலகாலம் சமணர்களோடு உழைத்து தூய்மை இழந்த இந்த உடலோடு ஐயனை தொழ அவர் மனம் ஒப்பவில்லை . தன் மனம் பரிசுத்தமானது போல் உடலும் தூய்மை பெற இச்சை கொண்டார் . தகாத சேர்க்கையால் மாசுபட்ட உடல் தூய்மை பெற தூங்கானை மாட ஈசனை நோக்கி 'பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் ' 'மின்னாரும் மூவிலை சூலமென்மேல் பொறி ' என்னும் விருத்தம் பாட சிவகணம் ஒன்று தோன்றி அவருடைய இரு தோள்களிலும் சூல குறியும் ரிஷப குறியும் யாரும் அறியா வண்ணம் பொரித்தது . நன்றி பெருக்கால் கண்ணீர் சொரிந்தார் நாவுக்கரசர் . இதனை அறியவந்த மக்கள் அவர் பெருமையை பேசி கொண்டாடினர் .
Very clearly presented. I get to know a lot of info from your blog. Thanks and continue your service
ReplyDeletethank you so much hema.it is a boost to my enthu
Delete