Sunday, 8 April 2018

தாய் பசுவை   பிரிந்த   கன்று   போல்   நாவுக்கரச ருக்கு  அதிகை   விரட்டானேஸ்வரரை   காண   உள்ளம்   துடித்தது .  தன்   நோயை   தீர்த்ததுடன்   தன்னை   இத்தனை   பேராபத்துகளிலிருந்தும்   காத்தருளி   ஒரு   தாய்க்கும்   மேலாக   தன்னை   காத்தருளிய   அந்த   ஈசனை   நினைந்து   நெக்குருகி   வீரட்டானம்   ஓடி வந்தார்.  அங்குள்ள   மக்கள்   நாவுக்கரசர்   சமணர்கள்   போதனையால்   பல்லவ   மன்னன்   எத்தகைய   கொடுமைகளுக்கு   ஆட்படுத்தப்பட்டார்   என்பதையும்   ஈசன்   அவரை  அத்தனை   கொடூரமான   தண்டனைகளிலிருந்தும்   அதிசயிக்க   வைக்கும்   வகையில்   எவ்வாறு   காத்து   அருளினார்   என்பதையும்   அறிந்து   இருந்தனர் .  அவர்கள்   அத்தகைய   பெருமை   வாய்ந்த   மகானை   தகுந்த   மரியாதையுடன்   வரவேற்க   மிக்க   ஆவல்   கொண்டு   மேளதாளங்களுடன்   மாலை   மரியாதையுடன்   விதிகளில்    ஊர்வலமாக   அழைத்து   சென்றனர் .

No comments:

Post a Comment