அப்பூதி அடிகள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை . மகனை உயிர்ப்பித்த அப்பருடைய பெருமை அவரை அவர் மீது கொண்டிருந்த பக்தியை இன்னும் அதிகமாக்கியது . அப்பரும் மகிழ்ச்சியுடன் அவர்களுடைய இல்லத்தில் அமுது செய்து விட்டு திருப்பழனம் திரும்பினார் . அங்கு கோயில் கொண்டிருக்கும் ஆபத்சகாயபெருமானை சேவித்து 'சொன்மாலை பயில்கின்ற ' எனும் பதிகம் பாடி அப்பூதி அடிகளின் பெருமையும் குறிப்பிட்டு அவரையும் வாழ்த்தி பாடினார் . அங்கு சிறிது காலம் தங்கிவிட்டு மறுபடியும் நல்லூர் சென்றார் . அங்கு சிலகாலம் தங்கி பிறகு தலயாத்திரை புறப்பட்டார் . சில இடங்களை தரிசித்த பிறகு திருவாரூர் சென்றார் . அங்கு அவரை வரவேற்க ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர் . அவரை பணிந்து அழைத்து சென்றனர் .
No comments:
Post a Comment