Monday, 9 April 2018

திருவதிகையை   அடைந்த நாவுக்கரசர்   அந்த  ஈசனை    உளமுருக   துதித்து   அவர்   மீது   பதிகங்கள்   பாடி   நன்றி   பெருக்கால்   கண்ணீர்   சொரிந்தார் .  மக்களும்   மெய்மறந்து   அதை   ரசித்தனர் .  இதனிடையே   பாதிரிபுலியூரில்   பத்திரமாக   கரையேறி   அதிகை   சென்று   தம்   உழவாரப்பணியில்   ஈடுபட்டார்   என்ற   செய்தி   அரசனுக்கு   எட்டியது .  நாவுக்கரசரின்   பெருமை   உணர்ந்தார் .  அப்போதே   அவருக்கு   சமணர்கள்   மீதிருந்த   பற்று   அறுந்தது .  தான்   அவருக்கு   இழைத்த   கொடுமைகளை   எண்ணி   வெட்கி   மிக   வருத்தம்   அடைந்தார் .   அவர்   காலில்   விழுந்து   மன்னிப்பு   கோர   அதிகை   விரைந்தார் .  அங்கு   நாவுக்கரசர்   சைவத்தின்   பெருமையை   உணர்த்த   ஐயன்   ஆடிய  திருவிளையாடல்   அதில்   அரசன்   ஒரு   கருவியே   என்று   கூறி   சமாதானம்   செய்தார் .  அரசன்   அவர்  காலடியில்   விழுந்து   வணங்கினார் .  பல்லவ   அரசன்   சமணர்களை   அடித்து   துரத்தி   விட்டு   அந்த   பள்ளிகளையும்   இடித்து   தள்ளினார் .  நிறைய   சிவாலயங்களை   எழுப்ப   துவங்கினார் .

No comments:

Post a Comment