நாவுக்கரசரின் இத்திடமான ஈசனிடம் கொண்ட நம்பிக்கை அவரை இத்தனை பேராபத்திலிருந்து காப்பாற்றிய அதிசயம் பல்லவனை சிறிது கலக்கமடையவே செய்தது . அனால் சமணர்கள் விடுவதாக இல்லை . அவரை பெரும் பாறையில் கட்டி கடலில் எறிய செய்தனர் . 'சொற்றுணை வேதியன் சோதி வானவன் ' எனும் நமசிவாய பதிகம் பாட அந்த பாறையே தோணியாகி அவரை திருப்பாப்புலியூர் கரையில் சேர்த்து . நாவுக்கரசர் நன்றி பெருக்குடன் அவ்வூர் ஆலயத்தில் ஐயனை பதிகங்கள் பாடி மனமாற தொழுது மகிழ்ந்தார் . பிறகு சிவாலயங்களை தொழ பயணம் புறப்பட்டார் . மன்னனுக்கு அப்போதுதான் அவர் மகிமை விளங்கியது.
No comments:
Post a Comment