Friday, 13 April 2018

நாவுக்கரசர்    ஈசனின்   பெரும்   கருணையை   நினைத்து   மெய்சிலிர்த்து    போனார் .  மறுநாள்   அங்கிருந்து   புறப்பட்டு   மற்று ம்   பல   சிவாலயங்களை      தரிசித்து   பிறகு   தில்லையை   அடைந்தார் .  அங்கு   அவரை   தில்லை   வாழ்   அந்தணர்கள்   மிக்க   அன்புடன்   வரவேற்றனர் .  சில   நாட்கள்   அங்கு   தங்கி   பல   பதிகங்கள்   பாடி   அம்பலக்கூத்தனை   மகிழ்வித்தார் .  ஐயனும்   பெரும்   மகிழ்ச்சி  அடைந்தார் .  பக்கத்தில்   திருவேட்களம்   திருக்கழிப்பாலை   முதலிய   இடங்களுக்கு   சென்று   அங்கு   குடிகொண்டிருக்கும்   பரம்பொருளையும்   சேவித்து   கொண்டு   தில்லை   திரும்பினார் .  ஒருநாள்   திருக்கழுமலத்தில்   அன்னையிடம்   ஞான  பாலுண்டு   கவிபாட   தொடங்கிய  ஞானசம்பந்த   பெருமான்   தங்கி   இருப்பதாக   கேள்விப்பட்டார் .  அவரை   காண   பேராவல்   கொண்டவராய்   தில்லை   ஈசனிடம்   விடை   பெற்று   கொண்டு   அடியார்கள்   தொடர   காழியம்பதியை   நோக்கி   புறப்பட்டார் .

No comments:

Post a Comment