Thursday, 12 April 2018

நாள்தோறும்   ஆலயத்தில்   தொண்டு   செய்தும்   எம்பெருமானை   வழிபட்டும்   வந்த   நாவுக்கரசருக்கு   மற்ற   சிவாலயங்களுக்கு   சென்று   அங்கும்   ஆலய   சேவை   செய்து   அங்குள்ள   ஈசனையும்   தொழுது   மகிழ   ஆவல்   கொண்டு   ஆலயங்களுக்கு   சென்று   பதிகம்   பாடி   மகிழ்ந்தார் .  அப்படியே   அவர்   தூங்கானை   மாடம்   எனும்   இடத்தை   அடைந்தார் .  அவர்   மனதில்   சிறிது   காலமாகவே   ஒரு   பெரும்   உறுத்தல்   இருந்து   வந்தது .   சிலகாலம்   சமணர்களோடு   உழைத்து   தூய்மை   இழந்த   இந்த   உடலோடு   ஐயனை   தொழ   அவர்   மனம்   ஒப்பவில்லை .   தன்   மனம்   பரிசுத்தமானது   போல்   உடலும்   தூய்மை   பெற   இச்சை   கொண்டார் .   தகாத   சேர்க்கையால்   மாசுபட்ட   உடல்   தூய்மை   பெற    தூங்கானை   மாட   ஈசனை   நோக்கி   'பொன்னார்   திருவடிக்கு   ஒன்றுண்டு   விண்ணப்பம்   போற்றி   செய்யும் '  'மின்னாரும்   மூவிலை   சூலமென்மேல்   பொறி '   என்னும்   விருத்தம்   பாட  சிவகணம்   ஒன்று   தோன்றி   அவருடைய   இரு   தோள்களிலும்   சூல   குறியும்   ரிஷப   குறியும்   யாரும்   அறியா  வண்ணம்   பொரித்தது .  நன்றி   பெருக்கால்   கண்ணீர்   சொரிந்தார்   நாவுக்கரசர் .  இதனை   அறியவந்த   மக்கள்   அவர்   பெருமையை   பேசி   கொண்டாடினர் .

2 comments:

  1. Very clearly presented. I get to know a lot of info from your blog. Thanks and continue your service

    ReplyDelete
    Replies
    1. thank you so much hema.it is a boost to my enthu

      Delete