Saturday, 21 October 2017

திண்ணன்   வேகமாக   சென்று   ஆ ற்றங்கரையை   அடைந்த  போது   சட்டென்று   கோவிலில்   குடுமித்தேவர்க்கு   அந்தணர்   செய்த  பூஜை   செயல்கள்   நினைவு   வந்தது .  நீரால்   அபிஷேகம்   செய்து   பூக்கள்   சாற்றி   பூஜித்திருந்தது   நினைவு   வந்தது . கையில்   இறைவன்   பசியாற   வெந்த   மாமிசம்   இருந்தது .மறறொரு   கையில்   வில்   இருந்தது    மற்ற   வில்வஇலை   புஷ்பம்   இவைகளை   எப்படி   எடுத்து   செல்வது .  ஒரு   நொடியில்   முடிவு   செய்தான் .  பூக்களையும்   வில்வ இலைகளையும்   பறித்து   தன்   தலை   முடியில்   செருகி   கொண்டான் .   ஆற்று   நீரை   தன்   வாயில்   உறிஞ்சி   கொண்டான் .   எல்லாம்   தயார்   என்று   மகிழ்ச்சியுடன்  மலையை   நோக்கி   தாவித்தாவி   பரபரப்புட ன்  ஓடினான் .  ஐயன்   தனியாக   இருப்பாரே   என்ற   ஆதங்கம்   அவனை   வாட்டியது .  வேகமாக   மலையை   அடைந்து   குடுமித்தேவரை   கண்ட   ஆனந்தபரவசம்   அடைந்தான் .கூடவே   அளவு   கடந்த   துக்கம்  இத்தனை   நேரம்   இந்த   காட்டு   மிருகங்கள்   ஏகமாக   நடமாடும்   இந்த   பயங்கர   வனத்தில்   தனியாக   எப்படி   இருந்தாய்   என்று   துக்கத்தோடு   வெகுவாக   அரற்றினான் .  தன்  செருப்பு   காலால்   ஐயன்   மேலிருந்த   புஷ்பங்களை   தள்ளிவிட்டு   தான்   வாயில்   கொண்டுவந்திருந்த   நீரால்   ஈசனுக்கு   அபிஷேகம்   செய்து   விட்டு   பூக்களை  சாற்றிவிட்டு   கொண்டுவந்திருந்த   மாமிசத்தையும்   படைத்து   விட்டு   ஐயனுக்கு   இரவு   தான்   தூங்காமல்   காவல்   இருக்க   போவதால்   பயமின்றி      பசியாறிவிட்டு   இருக்கும்படி   கூறினான் .  அவனுக்குத்தான்   அவரை   பற்றி   எத்தனை   கவலை .  

No comments:

Post a Comment