அன்பே உருவான இச்சிவனடியார் இக்காரியத்தை எதற்காக செய்தார்? தகுந்த காரணம் இல்லாமல் இருக்க முடியாது என்று உறுதியாக நம்பி ஸ்வாமி தாங்கள் இக்காரியத்தை செய்ததற்கு தகுந்த காரணம் இருக்க வேண்டும் . தாங்கள் வேறு யாரையாது தண்டிக்க வேண்டுமா? என்று பணிவுடன் வினவினார் . எறிபத்தர் நடந்தவற்றை விரிவாக விளக்கினார் . அதை கேட்ட மன்னர் மிக வருந்தி தாங்கள் கொடுத்த தண்டனை போதாது . தானும் தண்டிக்க பட வேண்டியவன் தான் என்று கூறி . தன் உடைவாளை உருவி. அடியார் கையில் கொடுத்து தன்னையும் வாளால் தண்டிக்குமாறு அவர் காலடியில் மண்டியிட்டார் மன்னன் . எறிபத்தர் கலங்கி போய் செய்வது அறியாது திகைத்தார் . உடனே அவ்வாளால் தன்னையே மாய்த்துக்கொள்ள யத்தனித்தார் . அதை கண்ட மன்னன் உடனே எழுந்து அவரை தடுக்க நினைத்தார் . அப்போது ஈசன் அங்கு தோன்றி அடியார்களிடம் தாங்கள் காட்டும் அபரிமிதமான அன்பை உலகிற்கு உணர்த்தவே இவ்விளையாடல் புரிந்ததாக கூறி யானையையும் சேவகர்களையும் பிழைக்க செய்தார் . எறிபத்தர் மன்னன் பட்டத்து யானைமேல் ஆரோகணித்து செல்வதை கண்டு மகிழ்ந்தார் .
No comments:
Post a Comment